Thursday 16 February, 2012

நட்பு


சஞ்சிவியாகும் நெல்லிக்கனியை உண்ண கொடுத்தும் ;
பதுங்கி இருக்கவேண்டிய  தருணத்திலும் 
தன் சிரத்தை கொடுத்தும் ;
கடவுள் போன்ற நட்பு;
அந்த நட்பே நம் ஊனிலும் ,உயரிலும் கலந்து உள்ளது !

Friday 7 October, 2011

ஆற்று படுக்கை


உன் கரைதனில்  வசித்தே  நாங்கள்
 அதிமனிதன் இருந்து நாகரிக மனிதனாய் மாறினோம் ;

பிறருக்கு பள்ளம் தோண்டியே அவர்களை புதைத்து  வளரந்தனால்;

 நாங்கள் உன்னையே சுரண்டுகிறோம் ,
நாங்களே புதைந்து  போகிறோமே  என்று தெரியாமலே :

நாங்கள் பரந்த மனப்பான்மை கொண்டதனால்
 நாட்டிற்கு  ஒரு சரஸ்வதி நதி  போதாது  என்று பல நதிகளாக உருவர்க்கிறோம்;

இந்நிலையே  நீடித்தால்  விரைவில் "கண்ணீர் துளிகளை சேமியுங்கள் "
என் விளம்பரம் பல தென்படும் !

Tuesday 12 July, 2011

கடவுளின் குறும்பு.

என் பெயரை சொல்லி கடவுளிடம் ஒன்றை
யாசித்தேன் ;
கடவுளும் அருளினார் ;
என் பெயரை கொண்ட வேறொரு முகவரியில் உள்ளவருக்கு !

Thursday 18 March, 2010

குப்பை தொட்டியில் பெண் சிசு .

இந்த குழந்தையும் சீதா தேவிதான் ,
இங்கே (நகரத்தில் ) விளை நிலங்கள் இல்லை ;
அதலால் அவ்விடத்தில் ஜனிதிருக்கிறாள் சில கயவர்களால் .

Thursday 17 December, 2009

ஒரு தலை காதல் .

உன் நிழலாய் இருக்க விரும்பினேன் ,
இருளில் கரையும் நிழலானது என் காதல் ;

பகல் பொழது நக்ஷதிரமானது என் காதல் ,
யாரும் ரசிப்பதில்லை என்னவள் உட்பட ;

எதிரொலிக்கும் மலைகளில் நம் பெயரை உச்சரித்தேன் ,
உன்னை போலவே மலையும் மௌனமாய் நிற்கிறது .

Friday 30 October, 2009

ஆச்சிரியமில்லை

உன் நினைவால் என்னையே மறக்கும் போது;
உன்னிடம் தொலைபேசியில் பேசும் போது வார்த்தைகளை மறப்பது ஆச்சிரியமில்லை !

Tuesday 13 October, 2009

கண்ணீர் துளி ,

சிப்பியில் துளிர்க்கும் நன்முத்துவின் மதிப்பை விட ;
என்னக்காக நீ இமை என்னும் சிப்பியிலிருந்து உதிற்கும் கண்ணீர் துளியின் மதிப்பு அதிகம் !