Thursday 17 December, 2009

ஒரு தலை காதல் .

உன் நிழலாய் இருக்க விரும்பினேன் ,
இருளில் கரையும் நிழலானது என் காதல் ;

பகல் பொழது நக்ஷதிரமானது என் காதல் ,
யாரும் ரசிப்பதில்லை என்னவள் உட்பட ;

எதிரொலிக்கும் மலைகளில் நம் பெயரை உச்சரித்தேன் ,
உன்னை போலவே மலையும் மௌனமாய் நிற்கிறது .

Friday 30 October, 2009

ஆச்சிரியமில்லை

உன் நினைவால் என்னையே மறக்கும் போது;
உன்னிடம் தொலைபேசியில் பேசும் போது வார்த்தைகளை மறப்பது ஆச்சிரியமில்லை !

Tuesday 13 October, 2009

கண்ணீர் துளி ,

சிப்பியில் துளிர்க்கும் நன்முத்துவின் மதிப்பை விட ;
என்னக்காக நீ இமை என்னும் சிப்பியிலிருந்து உதிற்கும் கண்ணீர் துளியின் மதிப்பு அதிகம் !

Friday 9 October, 2009

அக்னி பூக்கள்(penned on 18.7.08)

பெண்ணே காலை வேளையில் அல்லி குளம் அருகே செல்லாதே ;
உன் நிழல் பட்டு அல்லி மலர்போகிறது !

இறைவா (penned on 18.7.08)

இறைவா ;
குயிலின் இனிமையான கீதம் கொடுத்தாய் ;
கார்முகில் அமிர்தம் அஹ்ன மழை கொடுத்தாய் ;
கருமையான இரவில் நிலவை விண்மீன்களை கொடுத்தாய் ;
ஏனோ சில மனிதன் மனதில் கருப்பு என்னும் நிறத்தை வெறுக்க செய்தாய்;

Friday 2 October, 2009

காந்தி ஜெயந்தி

அன்று ;
காந்தி ஒரு கோட்சேவால் கொலையுண்டார் ,
இன்று ;
காந்தி பல கோட்சேகள் (லஞ்ச பணம் வாங்குபவர்கள் ,பணம் கொடுத்து மது பானம் அருந்துபவர்கள் ) கொலைசெய்யபடுகிறார் .

Saturday 5 September, 2009

துயரம்

அல்லி அமாவாசை அன்று படுகின்றேன் துயரத்தை நானும் அறிந்தேன் ;
உன்னை பார்க்காத அன்று !

Sunday 26 July, 2009

என் vlissingen வாழ்கை

இங்கே என் தமிழ் மெய் எழுத்துகளான கவிதையா இறைந்து கிடைகேன்றன ;
சூரியகாந்தி பூ சூரியனை நோக்கி மலர்வது போல ,
என் கண்கள் தமிழனை நோக்கி தேடுகின்றன காணும் கணத்தில் என் கண்கள் மலர்கின்றன ;
என் நாக்கு விஸ்வாமித்ரா போல தவம் புரிகின்றன,
மேனகை என்னும் "இட்லியை "காண்கின்ற வரை ,
என்று முற்று பெறுமோ என் நாவின் தவம் ;
மண்ணை காணாத என் பாதங்கள்,
என் காலணி இருந்து வெளியே வர மறுகின்றன;

சுவாசிக்க தினறகிறது

ஒரு தாயின் தொப்புள் கொடிலில் இரு உயிர்கள் இருப்பது உண்டு ;
இங்கே ஒரு தமிழ் தாயின் கொடிலில் பல கோடி உயிர்கள் ,
சில கோடி உயிர்கள் இலங்கையில் நசுக்க படுகிறது ;
அங்கே உயிர் எழுத்துகளில் ஆயுத எழுத்து மட்டுமே உயிர் உள்ளது ;
பிற எழுத்துகளில் ரத்தம் தோய்ந்தே இருக்கிறது ;
இதனால் இங்கே தமிழகத்தில் பல உயிர்கள் சுவாசிக்க தினறகிறது;
இங்கே சுவாசிக்கவும் அங்கே பல உயிர்கள் உயிர்தேழ்வும் அமைதி வேண்டுகிறேன் .

Thursday 9 July, 2009

தாவணி

ஒரு வேண்டுகோள் பெண்ணே ,
நீ தாவணி அணிந்து செல்லாதே ;
உன்னால் வானம் வானவில்லை தேடுகிறது ;
தன்னை உன்னை விட அழகுபடுத்தி கொள்ள!

Thursday 7 May, 2009

அக்னி நட்சத்திரம்

என்ன விந்தை சூரியனே ;
உன் கனல் பார்வையை தாளமுடியாமல் ;
பணகார்கள் குளிர்(மின் விசறி ,குளிர்சாதனம் ) தேடி ஒளிந்து கொள்வதால் ;
அவர்கள் இடம் நீ வெற்றி பெறுகிறாய் ;
ஆனால் நீ விவசாயிடம்,உழைபவர்களிடம் ,ஏழைகளின் இடம் தோத்துவிடுகிறாய் !
அவர்களின் வியவர்வைகளில் நீ குளிர் பெற்று இரவில் சந்திரனாக வருகிறாய் !

Wednesday 11 March, 2009

amma

புமியில் இடறி விழுகின்ற தருணகளில் " அம்மா" என்னஅழைக்கிறேன் ;
த்ருபதியை ரட்சித்த கண்ணனை போல;
அம்மா உன் நினைவு என் வலிகைளிர்ந்து ரட்சிக்கிறது.
காற்றிலே கலைகின்ற என் தலைமுடி நீ வருடுடிய நாட்களை நினைவதுபடுதுகின்ரன்.