Sunday 26 July, 2009

என் vlissingen வாழ்கை

இங்கே என் தமிழ் மெய் எழுத்துகளான கவிதையா இறைந்து கிடைகேன்றன ;
சூரியகாந்தி பூ சூரியனை நோக்கி மலர்வது போல ,
என் கண்கள் தமிழனை நோக்கி தேடுகின்றன காணும் கணத்தில் என் கண்கள் மலர்கின்றன ;
என் நாக்கு விஸ்வாமித்ரா போல தவம் புரிகின்றன,
மேனகை என்னும் "இட்லியை "காண்கின்ற வரை ,
என்று முற்று பெறுமோ என் நாவின் தவம் ;
மண்ணை காணாத என் பாதங்கள்,
என் காலணி இருந்து வெளியே வர மறுகின்றன;

சுவாசிக்க தினறகிறது

ஒரு தாயின் தொப்புள் கொடிலில் இரு உயிர்கள் இருப்பது உண்டு ;
இங்கே ஒரு தமிழ் தாயின் கொடிலில் பல கோடி உயிர்கள் ,
சில கோடி உயிர்கள் இலங்கையில் நசுக்க படுகிறது ;
அங்கே உயிர் எழுத்துகளில் ஆயுத எழுத்து மட்டுமே உயிர் உள்ளது ;
பிற எழுத்துகளில் ரத்தம் தோய்ந்தே இருக்கிறது ;
இதனால் இங்கே தமிழகத்தில் பல உயிர்கள் சுவாசிக்க தினறகிறது;
இங்கே சுவாசிக்கவும் அங்கே பல உயிர்கள் உயிர்தேழ்வும் அமைதி வேண்டுகிறேன் .

Thursday 9 July, 2009

தாவணி

ஒரு வேண்டுகோள் பெண்ணே ,
நீ தாவணி அணிந்து செல்லாதே ;
உன்னால் வானம் வானவில்லை தேடுகிறது ;
தன்னை உன்னை விட அழகுபடுத்தி கொள்ள!